banner

144 Movie review

144 Movie review
  • Banner
  • Thirukumaran Entertainment
  • Cast
  • Siva, Asshok Selvan, Oviya, Shruthi
  • Direction
  • Manikandan
  • Music
  • Shaan Rolden
  • Photography
  • R B Gurudev

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

144 - மொத்தத்தில் லாஜிக், மேஜிக் எதையும் விரும்பாதவர்கள் ஜாலியாக 2 மணி நேரத்தை செலவிட 144 சென்று வரலாம்.

தமிழ் சினிமாவில் படம் எடுப்பதை விட அதை ரிலிஸ் செய்ய தான் அத்தனை கஷ்டம், ஏனெனில் எதற்கு எடுத்தாலும் தடை தான். ஆனால், அந்த தடையை குறிக்கும் செக்‌ஷன் 144யே தலைப்பாக வைத்து இன்று வெளிவந்துள்ளது 144.இப்படத்தில் காமெடியில் புது தளத்தை கொண்டு வந்த சிவா, அசோக் செல்வன், ஓவியா ஆகியோர் நடிக்க மணிகண்டன் இயக்கியுள்ளார்.

கதை

ஏய்...அந்த வைரம் எங்க இருக்கு...என ஜெயசங்கர் பாணி கதைக்களம் தான் இந்த 144.

மதுரையில் உள்ள திருமங்கலம் ஏரியாவில் இரண்டு ஊர்களிடையே காலம் காலமாக தொடரும் ஈகோ சண்டையுடன் படம் ஆரம்பிக்கின்றது. ஒரே கால்வாய் அதில் யார் மீன் பிடிப்பது என்ற பிரச்சனையில் ஆரம்பித்து, கண்ணாடி விநாயகர் சிலையை எப்படி கரைப்பது என இந்த தலைமுறை வரை தொடர்கிறது பிரச்சனை. இதனாலேயே இந்த இரண்டு ஊருக்கும் இடையே வருடத்திற்கு ஒரு முறை அரசாங்கம் 144 விதிக்கின்றது.

இதில் எடுமலைப்பட்டி ஊரை சாரந்த சிவா ஒரு திருடன், அதிலும் எந்த திருட்டு செய்தாலும் மாட்டிக்கொள்ளும் திருடன். அதே ஊர் தலைவர் மதுசுதன் ஓர் விளம்பர விரும்பி, தனக்கு தானே போஸ்டர் அடித்து கார் ரேஸ் விட்டு தானே ஜெயிக்கும் அலட்டல் ஆசாமி. இவருடைய மகளை கார் ட்ரைவரான அசோக் செல்வன் காதலித்து வருகிறார்.

சிவா, சின்ன சின்ன திருட்டு செய்து மாட்டிக்கொள்ளும் நிலையில், காவல்த்துறையினரே கிண்டல் செய்ய, ஊர் பெரியவரான மதுசுதன் வைத்திருக்கும் நகை கடையை பாலியல் தொழிலாளியான ஓவியா உதவியுடன் கொள்ளையடிக்கிறார். அதே நேரத்தில் மதுசுதன் அவர்களின் மகன் ஸ்ருதி ராமகிருஷ்ணன், அசோக் செல்வனுடன் ஓட பிரச்சனை வெடிக்கின்றது.

இந்த இரண்டு உண்மைகளும் மதுசுதனுக்கு தெரிய, சிவா, அசோக் செல்வன் எஸ்கேப் ஆக, ஸ்ருதி ராமகிருஷ்ணனையும், ஓவியாவையும் மதுசுதனின் அடியாள் முனிஷ்காந்த் கடத்துகிறார். சிவா, அசோக் செல்வனும் எப்படியோ முனிஷ்காந்த் இடத்தை கண்டுபிடிக்க, மதுசுதன் வைத்திருக்கும் கண்ணாடி விநாயகர் சிலையில் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதை முனிஸ்காந்த் வாயிலாக சிவாவும், அசோக் செல்வனும் தெரிந்துக்கொள்கிறார்கள்.

பிறகு இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து அந்த தங்கத்தை கொள்ளையடிக்க, பின் போலிஸ், மதுசுதன், ஒரு கூலிப்படை கும்பல் என பல வழிகளில் இவர்களை நோக்கி அம்பு பாய்கிறது. இதிலிருந்து எல்லாம் இவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதே மீதிக்கதை

நடிப்பு

சிவா, எத்தனை கதாநாயகர்கள் இருந்தாலும் தனக்கே உரிய எக்ஸ்ப்ரேஷன், நகைச்சுவை வசனம் என அதிரி புதிரி செய்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இவரை திரையில் கண்டாலே சிரிப்பு தன்னால் வருகிறது. தன்னை கலாயப்பவரை கூட மிக சாதரணமாக குட் ஜோக் என ஒரு வார்த்தையில் சொல்லி கவுண்டர் கொடுக்கிறார்.

அசோக் செல்வன் சிவாவை மீறி பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை, ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் இருவரும் ஹீரோக்களுடன் ஓடுவது, அவ்வபோது ஸ்கீரினில் வருவது தான், ஓவியா தன் வழக்கமான அதே எக்ஸ்பிரேஷன், ஆனால், மதுரை பாஷை ஓவியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

படத்தில் மிகவும் கவர்வது சிவாவிற்கு பிறகு மதுசுதன், முனிஷ்காந்த் மற்றும் கூலிப்படை தலைவர் உதயபானு. அதிலும் முனிஷ்காந்த் பேசாமலேயே தன் சைகை மூலமாக செய்யும் சேட்டைகள் திரையரங்கமே வயிறு குலுங்க சிரிக்கும். முண்டாசுப்பட்டிக்கு பிறகு ஒரு நல்ல ரோல்.விநோதமான முறையில் டார்ச்சர் செய்யும் உதயபானு கதாபாத்திரம் அந்த கால காமிக் வில்லன் போல் உள்ளது, இருந்தாலும் ரசிக்க வைக்கின்றது.

படமே கிட்டத்தட்ட 2015ல் எடுக்கப்பட்ட ஒரு ஜெயசங்கர் படம் போல் தான் உள்ளது. படத்தில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், சான் ரோல்டனின் பின்னணி இசை சபாஷ். குருதேவின் ஒளிப்பதிவு ஈர்க்க வைக்கின்றது.

பலம்  

சிவா தனி ஆளாக மொத்த படத்தையும் தாங்குகிறார். எந்த இடத்திலும் இவர் காமெடிக்கு சலிப்பு வரவில்லை.

மதுசுதன், முனிஷ்காந்த், உதயபானு ஆகியோரின் வித்தியாசமான மேனரிசங்கள் ஈர்க்கின்றது.144 தடை உத்தரவு போட்ட பிறகு எப்படி ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் முதல் பாதி மிகவும் ஈர்க்கின்றது.

 பலவீனம்

கிளைமேக்ஸ் இது தான் என தெரிந்த பிறகு கொஞ்சம் இலுத்து கொண்டே செல்கிறது.பார்த்து பார்த்து சலித்து போன் கிளைமேக்ஸ் குடோன் சண்டைக்காட்சி.

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கலாம்.

 

Verdict : மொத்தத்தில் லாஜிக், மேஜிக் எதையும் விரும்பாதவர்கள் ஜாலியாக 2 மணி நேரத்தை செலவிட 144 சென்று வரலாம்.

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES