banner

பெங்களூர் நாட்கள் - திரை விமர்சனம்

பெங்களூர் நாட்கள் - திரை விமர்சனம்
 • Banner
 • PVP Cinemas
 • Cast
 • Arya, Sri Divya, Bobby Simha
 • Direction
 • Bhaskar
 • Music
 • Gopi Sundar
 • Photography
 • K V Guhan

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Banglore Naatkal - மொத்தத்தில் மலையாளத்தில் பார்க்கதவர்களுக்கு மட்டும் இந்த பெங்களூர் நாட்கள் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்

நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, அது நமக்கு பிடித்தது போல் வாழ வேண்டும், என்று தத்துவத்தை கொண்ட பல படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் கேரளாவில் வெளிவந்த படம் பெங்களுர் டேஸ்.

இப்படம் அதிரிபுதிரி ஹிட் அடிக்க, ரீமேக் ரைட்ஸை தமிழ் சினிமா வாங்கியது, துறுதுறு ஆர்யா, அப்பாவி பாபி, கலகலப்பான ஸ்ரீதிவ்யா, ரப் & டப்பான ராணா என பிரமாண்ட கூட்டணியுடன் தமிழில் பெங்களூர் நாட்களாக இன்று வெளிவந்துள்ளது.

கதை

ஸ்ரீதிவ்யா படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று கனவில் இருக்க, ஜாதகம் மூலம் திருமணம் என்று இடி வந்து விழுகின்றது. இதை தொடர்ந்து இவருக்கு, ராணாவுக்கும் திருமண ஏற்பாடு நடைப்பெறுகின்றது. ஸ்ரீதிவ்யாவின் கசின்ஸ் பாபி, ஆர்யா.பாபி பெங்களூரில் இன்ஜினியராக பணிபுரிய, இதே ஊரில் பைக் மெக்கானிக்காக ஆர்யா வருகிறார்.

ராணாவிற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் காதல் இருந்ததால், ஸ்ரீதிவ்யாவுடனான திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.ஆர்யா ரேடியோ ஜாக்கி பார்வதியை காதலிக்கின்றார், பாபி எப்போதும் வாழ்க்கையில் ஒரு கோடு போட்டு அதில் நேராக போய்க்கொண்டு இருப்பவர். இதில் இடையில் ஒரு காதல் தோல்வியை வேறு சுமந்து வருகிறார்.

ஆர்யா காதல் இவரின் வேலையை காரணம் காட்டி பார்வதி மறுக்கிறார். இதை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா-ராணா திருமண வாழ்க்கை என்ன ஆனது?, பாபி சிம்ஹா தன் கோட்டை விட்டு வெளியே வந்தாரா?, ஆர்யா தன் கோலில் வெற்றி பெற்று பார்வதியை கரம் பிடித்தாரா? என்பதை ஒரு எமோஷ்னல் ட்ரவலாக கூறியிருக்கிறது இந்த பெங்களூர் நாட்கள்.

நடிப்பு

மலையாளத்தில் கேரளா இங்கு கோயமுத்தூர், அதில் துல்கர் ஆர்டிஸ்ட், ஆர்யா செல்பி பைத்தியம் என ஒரு சில மாறுதல்களே படத்தில். துல்கருக்கு இணையாக ஆர்யாவும் தன் துறுதுறு நடிப்பார் அசத்துகிறார். மனதில் ஒரு சோகத்தை வைத்துக்கொண்டு வெளியில் சந்தோஷமாக இருக்கின்றார்.

பாபிக்கு இதுப்போன்ற அப்பாவி கதாபாத்திரம் நன்றாக செட் ஆகின்றது, இருந்தாலும் நிவின் பாலியிடம் இருந்த ஒரு ரியாலிட்டி கொஞ்சம் மிஸ்ஸிங்.

பாகுபலியில் மிரட்டும் வில்லனாக பார்த்த ராணா இதில் மிகவும் அடக்கி வாசிக்கின்றார். தன் காதலியை இழந்த சோகத்தில் மனைவியிடம் நெருங்கி பழகாமல் இருப்பது, கிளைமேக்ஸில் சீட் பெல்ட் போடுங்க என்று சொல்லி காரில் பறப்பது என ராணா கலக்குகிறார்.

ஸ்ரீதிவ்யா இன்னும் பல மடங்கு நடித்திருந்தாலும் சாரி மேடம், நஸ்ரியா கியூட் இதில் மிஸ்ஸிங் தான்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் பாஸ்கர், நம்மூர் சந்தோஷ் சுப்ரமணியத்தில் ரியல் இயக்குனர் இவர் தான், தமிழுக்கு வெல்கம் சார்.

பலம் 

படத்தின் காமெடி காட்சிகள்,

இசை 

ஒளிப்பதிவு

பலவீனம்

படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகிறது.

 

Verdict : மொத்தத்தில் மலையாளத்தில் பார்க்கதவர்களுக்கு மட்டும் இந்த பெங்களூர் நாட்கள் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES