banner

அனேகன் திரை விமர்சனம்

அனேகன் திரை விமர்சனம்
  • Banner
  • AGS Entertainment
  • Cast
  • Dhanush, Karthik, Amyra Dastura
  • Direction
  • K V Anand
  • Music
  • Harris Jayaraj
  • Photography
  • Om Prakash

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Anegan - தனுஷ் ரசிகர்களுக்கு ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்த மகிழ்ச்சி

இயக்குனர் கே.வி. ஆனந்த் தனது மாற்றான் திரைப்படத்திற்கு பின் 3 வருட இடைவெளிக்குப்பின் இயக்கி இருக்கும் படம் அனேகன். தனுஷ் பல வித தோற்றங்களில் இருப்பது போல வந்த இப்படத்தின் விளம்பரங்களும் வீடியோ ட்ரெய்லர்களும் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை தூண்டியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா தனுஷ்?

கதைக் களம்

இப்படம் ஒரு பேண்டஸி திரில்லர் ரகத்தை சேர்ந்தது. தனுஷ் நான்கு பாத்திரங்களில் நான்கு வித தோற்றங்களில், நான்கு வித கால கட்டங்களில் தோன்றுகிறார். தனுஷ் மட்டுமின்றி படத்தின் கதாநாயகி உட்பட முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த நான்கு கால கட்டங்களிலும் வெவ்வேறு பாத்திரங்களில் தோன்றுகின்றனர். அதை இயக்குனர் எவ்வாறு ஒரு திரைக்கதையில் புகுத்தி படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் என்பது தான் படத்தின் மையக் கரு. பர்மாவில் ராணுவ புரட்சி ஏற்பட்ட கால கட்டத்தில் படம் துவங்கிறது. அங்கிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் தனுஷும் அவரது காதலியும் இருக்கின்றனர். ஆனால் தனுஷின் மேல் ஒருதலைக்காதல் கொண்ட அவரது நண்பரின் முறைப்பெண் அவர்களை காட்டிக்கொடுப்பதால் அவர்கள் இருவரும் கடலில் மூழ்கி இறகிறார்கள். அதன் பின் நிகழ் காலத்துக்கு நகர்கிறது திரைப்படம்.

நடிகர் கார்த்திக் நடத்தும் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் தனுஷ் புதிதாக சேருகிறார். அங்கு பணிபுரியும் கதாநாயகி அமைரா தஸ்தூர் தனுஷை பார்த்தவுடனேயே பரிச்சயமானவராக அவரிடம் நெருக்கம் காட்டுகிறார். தனுஷ் ஆரம்பத்தில் அவரது செய்கையால் திகைத்தாலும் பின்னர் அவரது அன்பை ஏற்றுக்கொள்கிறார். அவ்வப்போது நாயகி தனது மன நோய் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும் போது கதை வெவ்வேறு கால கட்டங்களில் பயணிக்கிறது. இம்முறை களம், 80களின் பின் பாதியில் இருந்த சென்னையில் நடைப்பெறுகிறது. அதில் தனுஷ் வியாசர்பாடி காளி என்னும் தன் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்படும் எதைப்பற்றியும் கவலைப்படாத லோக்கல் வஸ்தாதாக வருகிறார்.

இம்முறை கதாநாயகி அமைரா தலைவாசல் விஜயின் பெண்ணாக வருகிறார். தனுஷுடன் ஏற்படும் காதல் சாதி காரணத்தால் தோல்வி அடைகிறது. அமைராவை பெண் பார்க்க வரும் கார்த்திக் அவர்களை சேர்த்துவைப்பதாக அழைத்துச் சென்று கொன்று விடுகிறார். அவர்களைத் தேடி வரும் தலை வாசல் விஜயையும் குற்றுயிராக விட்டு விட்டு தப்பிச் செல்கிறார். அதன் பின் நிகழ் காலத்திற்கு மீண்டும் திரும்பும் கதையின் முடிச்சுகளை இயக்குனர் எவ்வாறு அவிழ்கிறார் என்பதே திரைப்படத்தின் மீதிக் கதை.

பலம்

தனுஷ் தனது நான்கு வித கதாப்பாதிரங்களை உள்வாங்கி தனது உடல் மொழி மற்றும் தோற்றத்தின் மூலம் மிக அழகாக பிரதிபலித்துள்ளார். குறிப்பாக காளியாக அவர் தோன்றுவது பட்டையைக் கிளப்புகிறது. அவரது நடிப்பும் நடனமும் அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன. திரைப்படத்தில் ஒரு காட்சியில் தனுஷின் நான்கு கதாப்பாத்திரங்களும் ஒன்றாக உருவாகி ஒரே தனுஷாக வரும் போது கைத்தட்டலால் அரங்கம் அதிருகிறது.

ஒளிப்பதிவு இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ் ஆகும். கேமரா மேன், ஓம் பிரகாஷ், பர்மாவின் அழகிய பகுதிகளை கண்ணுக்கு விருந்தாக்கியுள்ளார். ஆர்ட் டைரக்டர் கிரண், வெவ்வேறு காலகட்டத்திற்கான காட்சி அமைப்புகளை தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். கதாநாயகி அமைரா தஸ்தூர் தனது அழகிய கண்களால் வசீகரிக்கிறார்.

மூத்த கலைஞர் கார்த்திக் தனது அண்டர் ப்ளே வகையான நடிப்பின் மூலம் அப்ளாசை அள்ளுகிறார். அவர் இடைவேளைக்குப்பின் காட்டும் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் அருமை.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்தும் அருமை. தனுஷ் மற்றும் மரண கானா விஜி பாடியுள்ள “டங்கா மாரி ஊதாரி” இளைஞர்களின் இப்போதைய நம்பர் ஒன் சாங்காக உள்ளது. கபிலன் வைரமுத்துவின் ”தெய்வங்கள் இங்கே” பாடல் மனதை வருடும் மெல்லிசையாய் காதில் இனிக்கிறது.

பலவீனம்

படத்தின் பலவீனம் என்றால் அது திரைக்கதையின் முடிவே ஆகும். கதையை எப்படி முடிப்பது என்று இயக்குனர் திணறி இருப்பது நன்றாக தெரிகிறது. மேலும் அதே நடிகர்கள் மீண்டும் மீண்டும் வேறு வேறு பாத்திரங்களில் வருவது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பூட்டுகிறது. முன் பாதியில் இருந்த விறுவிறுப்பு பின் பாதியில் இயக்குனர் கதையின் சஸ்பென்ஸை உடைத்த பின் காணாமல் போய்விடுகிறது. 

படத்தின் ஒன் லைனர்

அனேகன். தனுஷ் ரசிகர்களுக்கு ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்த மகிழ்ச்சி.

Verdict : தனுஷ் ரசிகர்களுக்கு ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்த மகிழ்ச்சி

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES