banner

Bhoolohan Movie Review

Bhoolohan Movie Review
  • Banner
  • Aascar Films
  • Cast
  • Jayam Ravi, Trisha, Prakashraj
  • Direction
  • Kalyan Krishnan
  • Music
  • Srikanth Deva
  • Photography
  • Sathishkumar

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Bhooloham - பஞ்ச் குறைவு.. பாடம் அதிகம்

தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் கிக் பாக்ஸராக அதகளம் செய்த ஜெயம் ரவி, ‘பூலோகம்’ படத்தில் வடசென்னை பாக்ஸராக களமிறங்கியிருக்கிறார்.

கதை

தன் அப்பா தற்கொலைக்கு காரணமானவரின் மகனை பாக்ஸிங்கில் ஜெயித்து அவனை கொல்ல வேண்டும் என சிறு வயதிலிருந்தே வெறியோடு வளர்ந்து நிற்கிறார் ‘பூலோகம்’ ஜெயம் ரவி. 

இவர்களின் இந்த வெறியை காசாக மாற்ற விளையாட்டு சேனல் உரிமையாளர் பிரகாஷ்ராஜ் பெரிய பாக்ஸிங் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்.இந்த உண்மை தெரியாமலேயே அந்த சேனல் நடத்தும் குத்துசண்டையில் ஜெயம் ரவி தன் எதிரியை வீழ்த்துகிறார். ஆனால், தன் எதிரி மரணப்படுகையில் வீழ்வதால் அவரது குடும்பமே நிலை குலைந்து போகிறது.

இதனைக்கண்டு மனம் உடையும் ஜெயம் ரவி, பாக்ஸிங்கே வேண்டாம் என ஒதுங்க நினைக்கிறார். ஆனால், பிரகாஷ்ராஜ் பணத்திற்காகவும் தன் சேனல் TRPக்காகவும் எப்படியாவது இந்த போட்டியை நடத்த வேண்டும் என, சில சதி வேலைகள் செய்து ரவியை சண்டைப்போட வைக்கிறார்.

இதற்கிடையில் ரவியின் மாஸ்டர் பொண்வன்னனும் இறக்கிறார். அவர் இறப்பிற்கான காரணத்தை அறிந்து மீண்டும் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார், பிரகாஷ் ராஜுக்கும் அவரின் பணத்திமிதுருக்கும் பதிலடி தந்தாரா என்பதே மீதிக்கதை..

நடிப்பு

ஜெயம் ரவி எம்.குமரனை விட பல மடங்கு ரியல் பாக்ஸராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். உடம்பை ஏற்றுவது மட்டுமில்லாமல் ஒரு பாக்ஸருக்கான அத்தனை மேனரிசங்களும் காட்டி அசத்தியுள்ளார்..குறிப்பாக கிளைமேக்ஸில் ஹாலிவுட் வில்லன் நேதன் ஜூன்ஸுடன் மோதும் காட்சியில் அப்படி ஒரு வில்லனுக்கு இப்படி ஒரு ஹீரோ தான் சமம் என்று சொல்ல வைக்கின்றது.

டூயட் இல்லாத, கதையில் பயணிக்கின்ற நாயகி கேரக்டர் த்ரிஷாவுக்கு, கொஞ்ச காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்..

இத்தனை நாள் இந்த பிரகாஷ்ராஜ் எங்கு சென்றார்,சில நாட்களாக இவரை ரொம்ப நல்லவராகவே பார்த்து பார்த்து நமக்கே சலித்து போக ’செல்லம் நான் வந்துட்டேன்னு’ வில்லனாக கலக்கியுள்ளார். அதிலும் ‘இவர்கள் எல்லோரும் குரங்குகள், அவர்கள் செய்யும் சேட்டைக்கு தான் பணம், அந்த குரங்குகளுக்கு இல்லை’ போன்ற வசனங்களின் மூலம் தன் அதிகாரத்திமிரை காட்டும் இடத்தில் சபாஷ். ஆனால், இத்தனை கோடிஸ்வரர் 10 ரூ சிகரெட்டை பிடிக்கும் இடத்தில் தியேட்டரே சிரிக்கின்றது.

பலம்

ஜெயம் ரவியின் கடின உழைப்பு

படத்தின் வசனங்கள்

படத்தின் இரண்டாம் பாதி

பலவீனம்

படத்தின் முதல் பாதி, மாற்றி மாற்றி அடித்துக்கொள்கிறார்கள், இடையில் பிரகாஷ்ராஜ் பேசுகிறார், த்ரிஷாவுடன் ஒரு சில காதல் காட்சி என செல்ல படம் கதைக்குள் செல்லவே கொஞ்சம் தடுமாறுகிறது.

பாடல்கள், காமெடி என பொழுதுபோக்கு விஷயங்கள் அறவே இல்லாததால் ஆக்ஷன் நெடி தூக்கலாக தோன்றியிருப்பது.

மொத்தத்தில் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் கண்டிப்பாக எம்.குமரனை நாக் அவுட் செய்திருப்பார் இந்த பூலோகம்..

Verdict : பஞ்ச் குறைவு.. பாடம் அதிகம்

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES