banner

எனக்கு வாய்த்த அடிமைகள் - திரைவிமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் - திரைவிமர்சனம்
  • Banner
  • Vansan Movies
  • Cast
  • Jai, Pranitha, Karunakaran, Kaali Venkat, Naveen
  • Direction
  • Mahendran Rajamani
  • Music
  • Santhosh Dhayanidhi
  • Photography
  • Mahesh Muthuswami

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Enakku Vaaitha Adimaigal - Movie Review - மொத்தத்தில் காதல் படம் என்றாலே அழுதுகொண்டே பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு ஜாலி படமாக இருக்கும்.

டைட்டில் கார்டிலேயே நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற மெஸேஜோடு படம் ஆரம்பிக்கிறது.

கதைக்களம்

ஐ.டி. இளைஞர் கிருஷ்ணா (ஜெய்) அவருடன் பணிபுரியும் திவ்யா (பிரணிதா) இருவரும் எனக்கு ஒரு லவ் செட் ஆகல ஆனா எல்லாருக்கும் செட் ஆகுது என்று காதல் ஜோடிகளை பார்த்தே இவர்கள் காதல் ஜோடி ஆகிறார்கள்.

நண்பர்களுடன் கொடைக்கானல் போகும் இவர்கள் அத்துமீறி காதலிக்கிறார்கள்.

பின், சென்னை திரும்பியதும் புதிய வேலைக்கு போகும் பிரணிதா, ஜெய்யை கழற்றிவிட்டு வேறொருவருடன் ஊர் சுற்றுகிறார்.

இதனால் அட்செட்டான ஜெய் தற்கொலை முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஜெய் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவரது நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? காதலில் ஜெயித்தாரா என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது எனக்கு வாய்த்த அடிமைகள்.

காதல், தற்கொலை என மிகவும் சீரியஸான இந்த கதைக்களத்தை கருணாகரன், காளி வெங்கட், நவீன், தம்பி ராமைய்யா என அனைவரும் சேர்ந்து ஜாலியான படமாக மாற்றிவிடுகின்றனர்.

க்ளாப்ஸ்

படத்தில் நடிகர்களின் பங்களிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் தன்னால் முடிந்தவற்றை காட்டியுள்ளார்.

பல்ப்ஸ்

கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதியில் கொஞ்சம் பின் வாங்கியிருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.

Verdict : மொத்தத்தில் காதல் படம் என்றாலே அழுதுகொண்டே பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு ஜாலி படமாக இருக்கும்.

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES