banner

எங்கிட்ட மோததே - திரைவிமர்சனம்

எங்கிட்ட மோததே - திரைவிமர்சனம்
  • Banner
  • Eros International RV Films
  • Cast
  • Natarajan,SubramaniamRajaji,ParvathyNair,SanchitaShetty,RadhaRavi
  • Direction
  • Ramu Chellappa
  • Music
  • Natarajan Sankaran
  • Photography
  • M.C Ganesh Chandra

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Enkitta Mothathe (2017 film) - மொத்தத்தில் ரஜினி-கமல் ரசிகர்கள் மட்டுமில்லை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கலாம்.

தமிழ் சினிமா எப்போதும் இரண்டு துருவங்களால் தான் ஆளப்படும். எம்.ஜி.ஆர்-சிவாஜியில் ஆரம்பித்து தற்போது இருக்கும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி வரை இரண்டு நடிகர்கள் மோதல் நடந்து வருகின்றது. இதில் 80களில் நடந்த ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலை நம் கண்முன் கொண்டு வர முயற்சி செய்துள்ளது இந்த எங் கிட்ட மோதாதே, மோதல் கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

தமிழ் சினிமாவை இன்று வரை இரண்டு துருவங்கள் ஆண்டு வருகின்றது. அதில் இன்றும் இளைஞர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது ரஜினி-கமல். இவர்களின் ரசிகர்கள் 80களில் எப்படி இருந்தார்கள் என்பதை நட்ராஜ், ராஜாஜி மூலம் ராமு செல்லப்பா கண்முன் கொண்டு வந்துள்ளார்.

நட்ராஜ் ரஜினி ரசிகர், ராஜாஜி கமல் ரசிகர், இருவரும் தங்கள் நாயகர்களின் பட ரிலிஸ் போது கட்-அவுட் வரைபவர்கள். ரஜினி-கமல் படங்கள் வெளிவரும் போதும் திருநெல்வேலியில் உள்ள ராதாரவியின் திரையரங்கு பலிகாடா ஆகின்றது.

அடித்து தும்சம் செய்கிறார்கள் ரசிகர்கள். இதனால் இனி ரஜினி-கமல் படமே எடுக்கக்கூடாது என ராதாரவி முடிவு செய்ய, ஆனால், அவரின் எதிர்கால அரசியல் ஆசை கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது.

இவர்களை எதிர்க்க முடியாது, ஓட்டு முக்கியம் என்பதால், படம் எடுப்போம், ஆனால், கட்-அவுட் வைக்க கூடாது என கூறி நட்ராஜ், ராஜாஜிக்கு ஷாக் கொடுக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே இந்த எங்கிட்ட மோதாதே.

படத்தை பற்றிய அலசல்

இன்றைய காலகட்டம் இல்லை, எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தக்கூடிய கதை இது. தற்போது தான் சமூக வலைத்தளங்களில் கேவலமாக ரசிகர்கள் சண்டை நடக்கின்றது. ஆனால், அப்போதெல்லாம் ஒரு ரசிகர் நோட்டு கொடுத்தால் மற்றொரு ரசிகர் சைக்கிள் கொடுப்பது போல் ஆரோக்கியமான போட்டியாக இருந்ததை நம் கண்முன் கொண்டு வருகின்றனர்.

அதிலும் நட்ராஜ் ரஜினியாகவே மாறிவிட்டார். தலை முடியை கோரிவிடுவதிலிருந்து வேகவேகமாக நடப்பது என அப்லாஸ் அள்ளுகின்றார். ராஜாஜி படம் முழுவதும் வீரவசனம் பேசி கடைசியில் அடி தான் வாங்கிவருகின்றார்.

சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் எல்லாம் ஹீரோயின் வேண்டும் என்பதற்காக வந்து செல்கின்றார்கள். காதல் காட்சிகள் பெரிதும் ரசிக்க முடியவில்லை. ராதாரவி மகா கலைஞன் என்பதை படத்திற்கு படம் நிரூபிக்கின்றார்.

இனி படமே எடுக்க மாட்டேன் என கூறிவிட்டு, ஓட்டுக்காக அடுத்த நொடியே மாறும் காட்சி எல்லாம் சீனியர்... சீனியர் தான். படத்தின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் ஏதுமே மனதில் ஒட்டவில்லை நட்ராஜன் சங்கரன் அவர்களே.

க்ளாப்ஸ்

இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் 80களில் நடந்த ரசிகர்கள் சண்டை(ஆரோக்கியமான)-யை காட்டியவிதம்.

ரசிகர்களின் மோதலை அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.

படத்தில் வரும் கட்-அவுட்டுகள் யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை, அத்தனை தத்ரூபம், மீண்டும் பேனர் கலாச்சாரம் ஒழிந்து கட்-அவுட் வரைவது வந்தால் நன்றாக இருக்கும் என நம்மையே நினைக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள்

Verdict : மொத்தத்தில் ரஜினி-கமல் ரசிகர்கள் மட்டுமில்லை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கலாம்.

Stars : 2.5/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES