banner

Inji Iduppazhagi Movie Review

Inji Iduppazhagi Movie Review
  • Banner
  • PVP Cinemas
  • Cast
  • Arya, Anushka
  • Direction
  • Prakash Rao
  • Music
  • Maragathamani
  • Photography
  • Nirav Shah

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

inji iduppazhagi - திரைக்கதையின் சைஸ்தான் ‘ஜீரோ’!

கதைக்காக ஹீரோக்கள்தான் உடம்பை ஏற்றி இறக்குவதை இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். முதல்முறையாக ஹீரோயின் அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக எடை கூட்டியிருக்கிறார். படம் வெயிட்டா?

கதை

குண்டாக இருக்கும் அனுஷ்காவிற்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போவதால் கவலை கொள்கிறார் அவரது அம்மா ஊர்வசி. இந்நிலையில் அனுஷ்காவைப் பெண் பார்க்க வருகிறார் ஆர்யா. இருவருக்குமே அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லாததால் பரஸ்பரம் பேசிப் பிரிகிறார்கள். அதன்பின்பு ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு மலர்கிறது. நட்பு காதலாகும் நேரத்தில், ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார் அனுஷ்கா.

குண்டாக இருப்பதால்தான் ஆர்யாவும் தன்னை நிராகரித்துவிட்டார் என கவலைகொள்ளும் அனுஷ்கா உடனடியாக உடம்பைக் குறைப்பதற்காக, பிரகாஷ் ராஜின் ‘சைஸ் ஜீரோ’ என்ற உடம்பு குறைக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேருகிறார். அனுஷ்கா ‘சைஸ் ஜீரோ’வில் சேரும் அதேநேரம் அவரது தோழி ஒருவருக்கு கிட்னி பெயிலியராகிறது. அதற்குக் காரணம் ‘சைஸ் ஜீரோ’வில் அந்த தோழி உட்கொண்ட பானம் ஒன்றுதான் என டாக்டர் சொன்னதால் அதிர்ச்சியடைகிறார் அனுஷ்கா மற்றும் அவரது தோழி.

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைக்கும் அனுஷ்கா, ஆர்யாவுடன் சேர்ந்துகொண்டு ‘சைஸ் ஜீரோ’ நிறுவனத்தின் போலித்தனத்தை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முயலுகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரகாஷ் ராஜும் சில காரியங்களில் ஈடுபடுகிறார்.

இந்த போராட்டத்தின் முடிவில் ஜெயித்தது யார்? ‘குண்டு’ அனுஷ்காவின் காதல் என்னவானது? என்பதே ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மீதிக்கதை!

நடிப்பு

இதுபோன்ற முயற்சியில் துணிந்து களத்தில் குதித்த அனுஷ்காவுக்கு முதலில் ஒரு ஸ்பெஷல் பொக்கே! வலுவில்லாத திரைக்கதையால் அனுஷ்காவின் உழைப்பு ‘விழக்கிறைத்த நீராக’ வீணடிக்கப்படிருந்தாலும் அவரின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் நிச்சயம் பாராட்டலாம். சின்னச் சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் படம் முழுக்க ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ‘குண்டு’ பியூட்டி!

ஆர்யாவுக்கு இப்படத்தில் இரண்டாவது இடம்தான். ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சரியாகப் பொருந்தியிருக்கிறார் ஆர்யா.

சந்திரபாபு ஸ்டைல் மீசையில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் ஏனோ படத்திலிருந்து தனித்து நிற்கிறார். அம்மா கேரக்டரில் ஊர்வசி என்றால் அவரின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை... அதகளம்!

மற்றபடி, ஆர்யாவின் காதலியாக வரும் சோனல் சௌகான் தனது ‘சைஸ் ஜீரோ’ உடம்பால் ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வேலை அவருக்கு கொடுக்கப்படவில்லை.

இது தவிர பிவிபி சினிமாஸிற்காக நாகார்ஜுனா, ராணா, ஜீவா, பாபி சிம்ஹா, தமன்னா, காஜல், லக்ஷ்மி மஞ்சு, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறார்கள்.

பலம்

1. படத்தின் ஒன்லைன்

2. அனுஷ்கா

3. நீரவ் ஷாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு

பலவீனம்

1. ரசிகர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வலுவில்லாத திரைக்கதை

2. பாடல்கள்

3. ‘தெலுங்கு டப்பிங்’ போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது

மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதையை உயிரோட்டமான காட்சியமைப்புகளுடன் கொஞ்சம் சீரியஸாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருந்தால் ‘இஞ்சி இடுப்பழகி’ வெயிட்டாக ரசிகர்கள் மனதில் புகுந்திருக்கும். ஆனால், சம்பந்தம் இல்லாத கோணங்களில் கதையை அங்கேயும் இங்கேயும் உலவ விட்டதால் முழுமையான திருப்தியை இப்படம் தரவில்லை...

 

Verdict : திரைக்கதையின் சைஸ்தான் ‘ஜீரோ’!

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES