banner

Irudhi Suttru Movie Review

Irudhi Suttru Movie Review
  • Banner
  • Thirukumaran Entertainment
  • Cast
  • Madhavan, Rithika Singh
  • Direction
  • Sudha Kongara
  • Music
  • Santhosh Narayanan
  • Photography
  • Sivakumar Vijayan

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Irudhi Suttru - வெற்றி சுற்று

அலைபாயுதே படத்தில் பணியாற்றிய மணிரத்னம், பிசி ஸ்ரீராம் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் உதவியாளர்களுடன் 16 வருடங்களுக்கு பிறகு அதே நாயகன் மாதவன் இணைந்துள்ளார். இவரின் மூன்று வருட கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்ப்போமா?

கதை

இந்தியாவின் நம்பர் 1 கோச் மாதவன், யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, சிடுசிடு முகம், பத்து வாரத்தையில் எட்டு வார்த்தை கெட்ட வார்த்தை, நீ எவனா இருந்தா எனக்கென்ன என்று இருக்கும் ஒரு கதாபாத்திரம், இவரை பிடிக்காத பாக்ஸிங் குழு தலைவர் ஜாகிர் பொய்யான காரணத்தை கூறி சென்னைக்கு மாதவனை மாற்றுகிறார்.

ஆனால், செல்லும் இடத்தில் எல்லாம் சிறந்த மாணவர்களை உருவாக்கும் மாதவனுக்கு சென்னை ஒரு சவாலாக இருக்கின்றது. அங்கு லக்ஸ், மதி(ரித்திகா) என்று அக்கா, தங்கைகளை சந்திக்கின்றார். இதில் லக்ஸ் பாக்ஸர், மதி மீன் விற்கின்றார். இதில் மதியிடம் ஒரு பாக்ஸருக்கான குவாலிட்டி இருப்பதை அறிந்த மாதவன், அவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்து பாக்ஸிங் கற்க வர சொல்கிறார்.

தன் அக்காவிற்கு பாக்ஸிங்கில் வெற்றி பெற்று போலிஸ் வேலை வேண்டும் என்பதற்காக மதி வேண்டுமென்றே தவறான ஷாட்டுக்களை அடிக்க, அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுகின்றனர்.

இதை தொடர்ந்து மாதவன் தனக்காக எத்தனை கஷ்டப்படுகிறார் என்பதை ஒரு கட்டத்தை நாசர் வழியாக அறிகிறார் ரித்திகா.பின் மீண்டும் மாதவனுடன் லக்ஸ் மற்றும் மதி இந்திய அளவில் ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்கின்றனர்.

மாதவன் ரித்திகாவிற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க, இதை கண்டு லக்ஸ் கோபப்படுகிறார். வேண்டுமென்றே தன் தங்கையின் கையை பயிற்சியின் போது அடிப்பட செய்ய, போட்டியில் ரித்திகா தோற்கிறார்.இதைக்கண்டு மாதவன் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, இதன் பின் ரித்திகா என்ன ஆனார், மாதவன் விருப்பப்படி பெரிய பாக்ஸர் ஆனாரா என்பதே மீதிக்கதை.

நடிப்பு

மாதவன்… எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தான் ஒரு வீரராக இருக்கவே விரும்புவார். ஆனால் பயிற்சியாளராக இருந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

டிரெயினராக இருந்தாலும் கடுமையான பயிற்சி கொண்ட உடற்கட்டு, அதற்கேற்ற பயிற்சி முறைகள், கோபம், வெறி என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.பெண் பித்தர், சரக்கடித்தல், போர்ட் மீட்டிங் காட்சிகள், தன் மாணவிகளுக்காக பணத்தை செலவழிப்பது என மிரட்டல் பார்வையில் மிரள வைத்திருக்கிறார். இனி மாதவன் சாக்லேட் பாய் அல்ல பாக்ஸர் பாய் என்றே சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் முகத்தை சுழித்து சிரிப்பது கைத்தட்டலை அள்ளும்.

நாயகி ரித்திகா சிங்… அவர்களே சொன்னால் ஒழிய இவர் புதுமுகம் என்று எவரும் நினைக்க போவதில்லை. மீன் விற்பது, புடவை கட்டி மாதவனுக்காக வழிவது, அக்காவுக்காக விட்டுக் கொடுப்பது, நாக் அவுட் செய்வது, அடாவடி செய்வது, குடும்பத்திற்காக ஏங்குவது, கோபம், வீரம் என ரித்திகாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அறிமுக படத்திலேயே அசத்திவிட்டார் அம்மணி.

இதுவரை தமிழ் சினிமா பாக்ஸிங் வீரர்களையே கொடுத்துள்ளது. முதன்முறையாக பாக்ஸிங் வீராங்கனை கிடைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை அடித்து விட்டு மாதவனை தேடி ஓடிச் செல்லும் காட்சியில் கண்களை குளமாக்குகிறார். வெல்டன் ரித்திகா.

இவர்களுடன் நாசர், ராதாரவி, காளி வெங்கட்.. மூவரும் தங்கள் பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள். நாசரும், காளி வெங்கட்டும் சீரியஸான பாக்ஸிங் படத்தை போராடிக்காமல் கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள்.

ரித்திகாவின் அக்காவாக மும்தாஸ் சர்கார், பாக்ஸிங் தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் அருமையான தேர்வு.

பலம்

மாதவன் -ரித்திகாவின் கதாபாத்திரம், இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர்

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் மீன் மார்கெட், சேரி வாழ்க்கை, பயிற்சி பெறும் இடங்கள், தண்ணியடிக்கும் காட்சிகள் என அனைத்தையும் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் சபாஷ் பெறுகிறார். கதையுடன் ஒட்டிச் செல்லும் பாடல்கள். எந்தவொரு வெளிநாட்டு தேசங்களுக்கும் கொண்டு செல்லாத பாடல் காட்சிகள். தீ பாடிய ஏய் சண்டக்கார, உசுரு நரம்பிலே பாடல்கள் கேட்கும் ரகம்.

பலவீனம்

மிகவும் ரியாலாக பாக்ஸிங் குறித்து காண்பித்திருப்பதால், பாக்ஸிங் தெரிந்தவர்களுக்கு அதெல்லாம் புரியும், சாதாரண சினிமா ரசிகர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை, அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம். மற்றபடி ஏதும் இல்லை.

விளையாட்டை பொருத்தவரை திறமையானவர்கள் நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்களை ஊக்குவித்து வழிகாட்ட தேவை ஒரு பயிற்சியாளர் மட்டுமே. அப்படி செய்தால் இந்தியா எப்போதும் தங்கப்பதக்கம் வெல்லும் என்ற ஆணித்தரமான கருத்தை சொன்னதற்கு ஹேட்ஸ் ஆப் சுதா.

Verdict : வெற்றி சுற்று

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES