banner

Kathakali Movie Review

Kathakali Movie Review
  • Banner
  • Vishal Film Factory, Pasanga Productions
  • Cast
  • Vishal, Catherine Tresa
  • Direction
  • Pandiraj
  • Music
  • Hip Hop Aadhi
  • Photography
  • Balasubramaniam

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Kathakali - கமர்ஷியல் எண்டர்டெயினர்.

தொடர்ந்து ‘பசங்க’ உலகத்தில் நடக்கும் சுவாரஷ்யங்களை நான்கைந்து படங்களில் பந்தி வைத்துக் கொண்டிருந்த இயக்குநர் பாண்டிராஜ் முதல் முறையாக ஒரு ஆக்‌ஷன் மசாலாவை கையிலெடுத்திருக்கிறார்.

ஆம்பள, பாயும் புலி படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என விஷால் மீண்டும் பாண்டியநாடு ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார்.

கதை

கடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிர்கள் தான். 

விஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது. ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடு செல்கிறார்.

கேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார்.தம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷாலின் மேல் சந்தேகம் எழுகிறது.

போலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

நடிப்பு 

விஷால் ஆறடி இளைஞனாக கம்பீரம் தோற்றம், ஸ்டண்ட் காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல் மிக யதார்த்தமாக கலக்குகிறார். தன் குடும்பத்திற்கு ஏதும் ஆக கூடாது என தவிக்கும் தருணம், தம்பாவை யார் கொன்றுயிருப்பார்கள் என பதட்டம் என பாண்டியநாடு விஷால் பேக்.

கேத்ரின் வெறுமென காதலிக்க மட்டும் தான், விஷாலின் நண்பராக வரும் கருணாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

ஹிப்ஹாப் ஆதி இந்த முறை அனைவரையும் ஏமாற்றி விட்டார், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருந்தாலும், படத்தில் வரும் 2 பாடல்களும் மனதில் நிற்கவில்லை.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும் இரண்டாம் பாதி முழுவதையும், அந்த இரவிற்குள் நம்மையும் பதட்ட பட வைக்கின்றது.

பலம்

படத்தின் இரண்டாம் பாதி..

பலவீனம் 

படத்தில் வரும் டுவிஸ்ட்டை கொஞ்சம் இடைவேளி விட்டு அவிழ்ந்திருந்தால் இன்னும் சுவாரசியம் நிறைந்திருக்கும், அடுத்தடுத்து உடனே டுவிஸ்ட்டை உடைப்பது, கொஞ்சம் யதார்த்ததை விலகி உள்ளது.

Verdict : கமர்ஷியல் எண்டர்டெயினர்.

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES