banner

Rajini Murugan Movie Review

Rajini Murugan Movie Review
  • Banner
  • Thirruppathi Brothers Film Media
  • Cast
  • Siva Karthikeyan, Keerthy Suresh, Soori
  • Direction
  • Ponram
  • Music
  • Imman
  • Photography
  • Balasubramaniam

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Rajini Murugan - நம்பி வாங்க சந்தோஷ‌மா போங்க

தடைகளை உடைத்தெறிந்து பொங்கல் விருந்தளிக்க வந்துள்ளார் ரஜினிமுருகன்.

வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான் மீண்டும் இணைய இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது. ரஜினி முருகன் உலகம் முழுவதும் இன்று 800 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

கதை

சிவகார்த்திகேயன்+சூரி கூட்டணி வேலைக்கே போகாமல் கலாட்டா செய்து வருகின்றனர் ஊருக்குள். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் யதார்த்தமாக பார்க்க வழக்கம் போல் பார்த்தவுடன் காதல்.ஆனால் கீர்த்தி சுரேஷ் அப்பாவிற்கு சிவகார்த்திகேயனை பார்த்தாலே பிடிக்கவில்லை.கீர்த்தியை காதலிக்க அவர் வீட்டு முன்பே டீக்கடை போடுகிறார் சிவகார்த்திகேயன்.

கீர்த்தி அப்பாவின் பேச்சை கேட்டு சிவகார்த்திகேயனை காதலிக்க மறுக்கிறார். பிறகு டீக்கடையை காலி செய்து ரியல் எஸ்டேட்டில் நல்ல பணம் வரும் என்று தன் தாத்தா ராஜ்கிரணிடம் பணம் வாங்கி ரியல் எஸ்டேட் ஆரம்பிக்க, அதே ஊரில் பணக்காரர்களை டார்க்கெட் செய்து பணம் பிடுங்கும் சமுத்திரகனி சிவகார்த்திகேயனிடம் பணம் கேட்டு மிரட்ட, சிவகார்த்திகேயன் அதை கொடுக்க மறுக்கிறார்.

சிவகார்த்திகேயன் தன் வீட்டை விற்க முயற்சி செய்ய அந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கு என்று சமுத்திரகனி வந்து நிற்கிறார்.

அந்த வீட்டை விற்றால் தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் செட்டில் ஆகமுடியும். அந்த வீட்டை சிவகார்த்திகேயன் விற்றாரா, சமுத்திரகனியின் சதி செயலை முறியடித்தாரா என்று கலகலப்பாக கமர்ஷியலாக கூறியிருக்கிறார் பொன்ராம்..

நடிப்பு

சிவகார்த்திகேயன் காமெடி, செண்டிமெண்ட், ஆடல், பாடல் என அதகளம் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷிற்கு இப்படம் தான் தமிழ் சினிமாவின் பிள்ளையார் சுழி என்று கூட சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு கவுண்டர் கொடுப்பது, பாடல் காட்சியில் குட்டி குட்டி எக்ஸ்பிரஷன் என ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றார். 

சூரி சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கவுண்டர் கொடுத்து கலகலப்பாக்குகிறார். 

ராஜ்கிரண் நல்ல நடிகர் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக எப்போதும் போல் ஸ்கோர் செய்கிறார். 

சமுத்திரகனி கதாபாத்திரத்தில் அழுத்தமே இல்லை.

டி.இமான் இசையில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன..

பலம்

சிவகார்த்திகேயன் காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என முழு கமர்ஷியல் ஹீரோவாகிவிட்டார்.

படத்தில் எந்த காட்சியும் போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் பொன்ராம். .

பலவீனம்

வழக்கமான கமர்ஷியல் பார்முலா பார்த்து பழகிய கதை.

 

Verdict : நம்பி வாங்க சந்தோஷ‌மா போங்க

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES