banner

Rudhramadevi Movie Review

Rudhramadevi  Movie Review
  • Banner
  • Guna Team Works, Sri Thenandal Films
  • Cast
  • Anushka, Allu Arjun, Nithya Menon,Rana Daggubatti, Catherine Tresa
  • Direction
  • Gunasekar
  • Music
  • Ilayaraja
  • Photography
  • Ajayan Vincent

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Rudhramadevi - நல்லாட்சி புரிவாள்

நடிகை அனுஷ்கா, ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ருத்ரமாதேவி, இயக்குனர் குணசேகரின் கனவு படமான இது மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராணா இருப்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கதை

காக்திய சாம்ராஜ்யம் தான் கதை நிகழும் இடம், அதை ஆளும் மன்னன் கணபடிதேவுடு (கிருஷ்ணமா ராஜு). அவனுக்கு பின் ராஜ்யத்தை ஆழ வாரிசு இல்லை.
இந்த நேரத்தில் தான் மகாராணி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். ஆண் வாரிசு எல்லை என தெரிந்தால், எதிரி சாம்ராஜயமான தேவகிரியின் அரசன் நாட்டை தாக்க கூடும் என்று நினைத்து.

ருத்ரமா தேவியை பட்டத்து இளவரசனாக மாற்றி ருத்ர தேவடுவாக அறிவிக்கிறார். ருத்ரமா தேவியும் தன் அடையாளங்களை மறைத்து போர்க்கலைகளில் தேர்ச்சிபெறுக்கிறார். பின் ஒரு நாள் பட்டத்து இளவரசன் நிஜமான் பெண் என்ற உண்மை காக்திய சாம்ராஜ்யத்திற்கு தெரியவருகிறது.

பின் ருத்ரமாதேவி என்ன செய்தார்? தன்னை மகாராணியாக அறிவித்து ஆட்சி செய்தாரா? எதிரி மன்னன் படையெடுத்து வந்தானா?அல்லு அர்ஜுன் மற்றும் ராணாவிற்கு படத்தில் என்ன வேலை என்பன போன்ற கேள்விகளுக்கு தொய்வான இரண்டாம் பாதி விடையாக அமைந்துள்ளது.

பலம்

படத்தில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணியாக பிரமாதப் படுத்தியிருக்கிறார். பாடல்களில் அழகாகவும் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அனுஷ்காவின் சாகசம் அரங்கத்தில் கைத்தட்டல்களை அள்ளுகிறது. படத்தின் காட்சிகளுக்கு நிறையவே செலவு செய்திருக்கிறார்கள். VFX க்கு மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார் குணசேகர்.. அல்லு அர்ஜுனின் நடிப்பு ஆளுமையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
அதுவும் அவரது அறிமுக காட்சி அருமை. இறுக்கமான முகத்துடன் அல்லு அர்ஜுன் செய்யும் நகைச்சுவையும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணமா ராஜு என அனைவரும் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகிறார்கள்.

பலவீனம்

பலவீனம் என்ன என்றால், இரண்டாம் பாதி திரைக்கதை தான். முதல் பாதியில் அடுக்கடுக்கான காட்சிகள் விரைவாக கதை சொல்கிறது. ஒரு ராணி உருவாகுக்கிற காட்சிகள் அதற்கான நியாத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இடைவேளையை எதிர்பார்ப்புடன் வைத்துவிட்டு அதன் பின்னான காட்சிகள் படத்தின் வேகத்தை தடாலடியாக குறைத்துவிடுவது படத்தின் மிகப்பெரும் பலவீனமாக அமைகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி பாடல்களை தவிர்த்திருக்கலாம். நித்யா மேனன் மற்றும் கேத்ரின் தெரஸாவிற்கு குறிப்பிட்டு சொல்லும்படி படத்தில் ஒரு வேலையும் செய்யவில்லை.

ஆடை அணிகலன்கள் தேர்வு, போர்க் கால கருவிகள், அரண்மனை அரங்குகள் என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. VFX காட்சிகளும் அதனுடன் பொருந்துகிற வகையில் இருக்கிறது. என்னதான் VFX நன்றாக இருந்தாலும் போர்க்கள காட்சிகளில் அதன் நேர்த்தி குறைவு.

ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சன்டின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது. படத்தில் தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் கத்தரித்திருந்தால் திரைக்கதை வேகமெடுத்திருக்கும். இளையராஜா பாடல்களில் சுமாராக வாசித்து, பின்னணியில் உயிர் ஊட்டியிருக்கிறார். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் வசனங்கள்.

அதிலும் அல்லு அர்ஜுன் பேசும் வனங்கள் நினைவில் நிற்கின்றன. இயக்குனர் குணசேகரின் கனவு படமாக இருந்தாலும் முதல் பாதியில் காட்டிய அக்கறையை இரண்டாம் பாதியிலும் காட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்னும் படம் மிரட்டலாக வந்திருக்கும்.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்புகள் என குணசேகர் கடினமாக உழைத்திருக்கிறார். ஒரு வரலற்று திரைப்படம் எடுப்பது ஒன்றும் சுலபமல்லவே. குணசேகரின் முயற்சி, அனுஷ்காவின் அதிரடி ஆக்ஷன் நடிப்பு இவற்றை பாராட்டுவதற்காவே ருத்ரமாதேவி படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Verdict : நல்லாட்சி புரிவாள்

Stars : 2.5/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES