ரம் - திரைவிமர்சனம்

- Banner
- All In Pictures
- Cast
- Hrishikesh,NarainSanchitaShetty,MiyaGeorge,Vivek
- Direction
- Sai Bharath
- Music
- Anirudh Ravichander
- Photography
- Vignesh Vasu
Music Review | Movie Review | Movie Gallery | Trailers
Rum - மொத்தத்தில் ரம் முதல் கொஞ்சம் கூலிங் கம்மி தான்.
தமிழ் சினிமாவில் கதையுள்ள படங்கள் வருவதைவிட தற்போதெல்லாம் பேயுள்ள படங்களே வருகின்றது. வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் தம்பியாக நடித்த ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதாஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் சாய் பரத் இயக்கத்தில், அனிருத்தின் மிரட்டல் இசையில் இன்று வெளிவந்துள்ள படம் ரம், அது சரி ரம் நம்மை மிரட்டியதா? பார்ப்போம்.
கதைக்களம்
ரிஷிகேஸ், விவேக், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ப்ளான் செய்து பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல், இவர்கள் ரூ 25 கோடி மதிப்புள்ள சில அரிய வகை கற்களை கொள்ளையடிக்கின்றனர்.
இதை தொடர்ந்து அந்த பணத்தில் எனக்கும் பங்கு வேண்டும் என்று நரேன் எண்ட்ரீ ஆக, அதை தொடந்து சில நாட்கள் அவர் கண்ணில் இருந்து தப்ப, ரிஷிகேஷ் டீம் நிலாவூரில் உள்ள ஒரு பங்களாவில் பதுங்குகின்றது.
அங்கு சில அமானுஷிய விஷயங்கள் தொடர்ந்து நடக்க, அதை தொடர்ந்து அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வர முடியாத படி பேய் லாக் செய்கின்றது, அந்த வீட்டில் பேயாக இருப்பவர்கள் யார்? அந்த கல் விஷயத்தில் நரேன் ஏன் எண்ட்ரீ கொடுத்தார்? என்பதை அடுத்தடுத்த காட்சிகள் கூறுகின்றது.
படத்தை பற்றிய அலசல்
பேய் படம் என்றாலே டெம்ப்ளேட்டாக ஒரு பேய் பங்களா இருக்கும், அப்படித்தான் நிலாவூரில் இருக்கும் இந்த பங்களாவும், ரிஷிகேஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக வந்தவர்.
அந்த படத்தில் மட்டுமின்றி இந்த படத்திலும் ஏன் சிரிக்க கூட மாட்டுகின்றார் என்று தெரியவில்லை, ஆனால், அதற்கும் விவேக் ஒரு காட்சியில் ‘இவன் எல்லா சீனுக்கு ஒரே ரியாக்ஷன் தான் கொடுப்பான்’ என கிண்டல் செய்து ஆடியன்ஸ் பல்ஸை கேட்ச் செய்கிறார்.
படத்தின் மிகப்பெரும் பலமே விவேக் தான், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன் மேன் ஷோவாக மிரட்டியிருக்கிறார், அதிலும் ‘இவன் போலிஸா, பத்திரிக்கைக்காரானா இல்லை மீம் கிரியேட்டரா?’ என கேட்கும் இடமெல்லாம் இன்றைய ட்ரண்ட் இளைஞர்களையும் சிரிக்க வைக்கின்றார்.
அனிருத்தின் இசை மிகவும் கைக்கொடுத்துள்ளது, பாடல்கள் இல்லாமலேயே படத்தை நகர்த்தியிருக்கலாம், பின்னணி இசையில் நமக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறார், ஒளிப்பதிவும் படம் பாதி இருட்டிலேயே இருந்தாலும், எந்த இடத்திலும் அலுப்பு தெரியவில்லை.
படத்தின் முதல் பாதி திகில், காமெடி என கலகலப்பாக நகர, இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் 1000 பேய் படத்தில் பார்த்தது போலவே உள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, அனிருத்தின் பின்னணி இசை.
விவேக் செய்யும் கலாட்டா. கிளைமேக்ஸில் எப்படி இறந்தார்கள் என்பதை விஷ்வல் ஆக காட்டிய விதம்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள், மிகவும் டெம்ப்ளேட் வில்லன் கதாபாத்திரம்.
Verdict : மொத்தத்தில் ரம் முதல் கொஞ்சம் கூலிங் கம்மி தான்.
Stars : 2/5
Leave a comment.