banner

Thaarai Thappatai Movie Review

Thaarai Thappatai Movie Review
  • Banner
  • B Studios, Company Productions
  • Cast
  • Sasikumar, Varalakshmi
  • Direction
  • Bala
  • Music
  • Ilaiyaraaja
  • Photography
  • Chelyan

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Thaarai Thappatai - கோர தாண்டவம்

பாலா மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் இது இளையராஜாவின் 1000வது படம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கதை

தஞ்சாவூர் பின்னணியில் நடக்கும் கதையில் சசிக்குமார் நடத்தும் ஒரு கரகாட்டக் குழுவின் ஆட்டக்காரியாக வருகிறார் வரலட்சுமி.

இருவருமே ஒரு சந்தர்ப்பத்தில் கணவன், மனைவியாகி விட, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் வரலட்சுமியை கதறக்கதற கற்பழித்து விடுகிறார் வில்லன் சுரேஷ்.

அப்புறம் என்ன? கற்பழித்தவனுடன் சசிக்குமார் போடும் வன்முறை வெறியாட்டமே கதை.

படத்தை பற்றிய அலசல்

பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிக்குமார் முதல் முறையாக அவருடைய இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறார். வழிக்காத தாடி, நீளமான தலைமுடி என கெட்டப்பில் தனி கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

வரலட்சுமியுடன் அவர் காட்டும் நெருக்கம் அப்படி ஒரு அன்யோன்யம். ஒரு காட்சியில் சசிக்குமார் மேளம் அடிக்க, அதற்கு வரலட்சுமி இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட அங்கே நிஜ கரகாட்டத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் இந்தப்படத்தில் நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவில் தஞ்சாவூரின் மண் வாசனையை ஸ்கிரீனில் மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இளையராஜாவின் 1000-மாவது படமென்பதால் இப்படத்தின் பாடல்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றாற் போல் மீண்டும் தனது கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இசைஞானி இளையராஜா. 

Verdict : கோர தாண்டவம்

Stars : 2.5/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES