banner

Vedalam Movie review

Vedalam Movie review
  • Banner
  • Sree Sairam Creations
  • Cast
  • Ajithkumar, Shruthihaasan, LakshmiMenon
  • Direction
  • Siva
  • Music
  • Anirudh
  • Photography
  • Vetri

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Vedalam - மசாலா கலந்த அதிரடி பாசமலர்

தல ரசிகர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாய் சரவேடியுடன் வேதாளம் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்க தொடங்கியுள்ளனர். வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா- அஜித் கூட்டணி மீண்டும் வேதாளம் மூலம் இணைந்தால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இத்தனைக்கும் வேதாளம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் தவிர வேறு எதுவும் ப்ரோம்ஷன்க்காக படக்குழு செய்யவில்லை அப்படி இருந்தாலும் இந்த அலைமோதும் கூட்டம் ஒருவருக்காக அது தல.

கதை

படத்தின் ஒப்பனிங்கே இத்தாலியில் வில்லன் ராகுல் தேவ் வுடன் ஆரம்பமாகிறது வேதாளம். ஒரு சர்வதேச குற்றவாளியான ராகுல் தேவ் வை ஒரு ராணுவ அதிகாரி தன் கூட்டத்துடன் பிடிக்க முயற்சி செய்து தோல்வியில் உயிரைவிடுகிறார், ஆனால் உயிரை விடும் போது "உன்னை எதிர்க்க என்னை போல் ஒரு நல்லவன் வருவேன் டா என்ற வீர வசனத்துடன் உயிரை விட அடுத்த நொடியே கொல்கத்தா பயணமாகிறது படம்.

தன் தங்கை லக்ஷ்மி மேனன் படிப்புக்காக அஜித் கொல்கத்தா வர, அங்கு சூரியின் உதவியோட டாக்ஸி டிரைவர் வேலை செய்கிறார். ரொம்ப சாதுவாக தங்கை மீது அதிதம் பாசம் கொண்ட அண்ணனாக இருக்கிறார் , இடையில் ஸ்ருதிஹாசன் வக்கீலாகவும் படத்தின் காமெடி க்காகவும் அடிக்கடி வந்து செல்கிறார். இதனிடைய கொல்கத்தா போலீஸ் தீவரமாக தேடும் ராகுல் தேவ் வின் தம்பி யை டாக்ஸி டிரைவரான அஜித் போலீசிடம் பிடித்து கொடுக்கிறர் . இதனால் கடுப்பான ராகுல் தேவ் வின் தம்பி அஜித்தை கடத்தி தன் இடத்தில போட்டு தள்ளும் போது எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுக்கிறார் அஜித்.

நீ என்னை கடத்தி வரவில்லை நானே தான் வந்தேன் என்ற வசனத்துடன் ராகுல் தேவ் வின் தம்பி அஜித் போட்டு தள்ள அங்கிருந்து ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. சாதுவான அஜித் தீடிரென்று விஸ்வரூபம் எடுப்பது ஏன் ? தங்கையிடம் மட்டும் பயந்த சுபவமுள்ளவரை இருப்பது ஏன் ? யார் இவர் ? எதற்காக வில்லன்களை துரத்துகிறார் போன்ற பல முடிச்சுகளுடன் நகர்கிறது வேதாளம் .

நடிப்பு

அஜித் நடித்த படங்களில் இது வரை பண்ணாத ஒரு சைக்கோத்தனமான கதபாத்திரத்தில் நம்மை அஜித் மிரட்டுவது உறுதி. வில்லன் ஆட்களுடன் அவர் மோதும் காட்சி அனல் பறக்கிறது, குறிப்பாக அவர் வில்லன் ஆட்களுடன் மோதும் போது அவர் செய்யும் முகபாவனை அட அட.அதன்பின் சில செண்டிமெண்ட் காட்சியில் நம் தொண்டை கனமக்கிறார் அஜித்.

லக்ஷ்மி மேனன் சுற்றி தன் இந்த படம் நகர்கிறது , உண்மையில் தங்கையாக நடித்துமே என்பதற்கு வருத்தபடுவதற்கு வேலை இல்லாமல் தன் யாதர்த்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சுருதிஹாசன் படத்திற்கு ஒரு அழகு தேவதை என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் படத்தில் ஒரு முக்கியமான காட்சி திருப்பத்திற்கு காரணமாக அமைகிறார் ஸ்ருதிஹாசன்.

சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் கடுப்புதான் வருகிறது. இப்படத்தில் கோவைசரளா , சுவாமிநாதன் , பாலசரவணன் , ரமேஷ் மொட்டை ராஜேந்திரன் போன்ற பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான இடம் குறைவு தான் , இருந்தாலும் தங்கள் பங்கை சரி வர செய்துள்ளனர்.

பலம்

அஜித் தன் நடிப்பால் இந்த படத்தை ஒரு படி நிமிர செய்கிறார். இப்படம் பழைய கதையாக இருந்தாலும் கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்ற சிவாவின் திரைக்கதை.குறிப்பாக "நீ கெட்டவன் நா நான் கேடுகெட்டவன் போன்ற வசனத்துக்கு கைதட்டல் அள்ளுகிறது..

அனிருத் தின் பாடல்கள் படம் வெளிவரும் முன்பே செம்ம ஹிட் , இன்று அலுமா டாலுமா பாடலுக்கு விசில் பறக்கிறது மற்றும் பின்னணி இசை யிலும் கலக்கியுள்ளார் குறிப்பாக எடிட்டர் ரூபன் னின் வேலை பற்றி சொல்லியே ஆக வேண்டும், இப்படத்தின் மிக பெரிய பலம் அவரின் எடிட்டிங் ஸ்டைல்.

ஒளிபதிவாளர் வெற்றியின் விழி, இத்தாலி , கொல்கத்தா , சென்னை காட்டிய விதத்திலும் சரி மற்றும் சண்டைகட்சிகளிலும் சரி என்று நம்மை மிரள வைத்துள்ளார்.

பலவீனம்

இந்த படத்தில் புதிதாக கதையில் சொல்ல எதுவுமே இல்லை , பார்த்து பழகி போன கதை தான். தெலுங்கு வாடை அதிகமாக உள்ளது போல் தெரிந்தது .

படத்தில் வரும் வில்லன் ஆட்களின் தேர்வு மனதில் ஓட்ட வில்லை. குறிப்பாக அவர்களின் லிப் சின்க் ஒழுங்காக இல்லைஇயக்குனர் சிவா அஜித் என்ற மாஸ் ஹீரோ வை பல டைமன்ஷங்களில் நடிக்கவும் வைத்து மற்றும் குடும்பங்களுடன் கொண்டாடும் வகையில் இந்த படத்தை கொடுத்துள்ளார்

Verdict : மசாலா கலந்த அதிரடி பாசமலர்

Stars : 2/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES