banner

என்னை அறிந்தால் திரை விமர்சனம்

என்னை அறிந்தால் திரை விமர்சனம்
  • Banner
  • Sree Sairam Creations
  • Cast
  • Ajithkumar, Arun Vijay, Trisha,Anushka
  • Direction
  • Gautham Menon
  • Music
  • Harris Jayaraj
  • Photography
  • Dan Maccathur

Music Review | Movie Review | Movie Gallery | Trailers

Yennai Arindhaal - வெற்றி நிச்சயம்

கதை

சென்னையில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் சுமனின் உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால், அவருக்கு வேறு ஒருவருடைய உடல் உறுப்புகளை பொருத்தியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்று, பணம் சம்பாதிக்கும் கும்பலை சேர்ந்த அருண் விஜய்யின் கும்பலிடம், சுமனுக்கு மாற்று உறுப்புகளை கொண்டு வரும் பணி தரப்படுகிறது. 

அதன்படி, அமெரிக்காவில் வசித்து வரும் அனுஷ்காவின் உறுப்புகள் சுமனுக்கு பொருந்தும்படியாக இருப்பதால் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். இந்த கடத்தல் கும்பலின் திட்டத்தை தெரிந்துகொண்ட போலீஸ் கமிஷனரான அஜித், அனுஷ்காவுக்கு தெரியாமலேயே அவரை காப்பாற்ற திட்டம் போடுகிறார். 

அதன்படி, அஜித்தும் அமெரிக்கா சென்று, அனுஷ்கா பயணம் செய்யும் விமானத்தின் இருக்கைக்கு பக்கத்திலேயே தானும் பயணிக்கும்படி ஏற்பாடு செய்கிறார். விமானத்திலேயே அனுஷ்காவிடம் சகஜமாக பழகும் அஜித்தை அனுஷ்காவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. அவருடன் நட்பு வைத்துக் கொள்ள நினைக்கிறார். 
மறுநாள் குறிப்பிட்ட இடத்தில் தன்னை சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அவளை பிரிகிறார் அஜித். மறுநாள் அஜித் கூறிச்சென்ற இடத்துக்கு செல்லும் அனுஷ்காவை அருண் விஜய் ஆட்கள் கடத்த முயற்சிக்க, அவர்களிடமிருந்து அனுஷ்காவை காப்பாற்றுகிறார் அஜித். 

அஜித்தைத்தான் கொல்ல வந்திருப்பதாக நினைக்கும் அனுஷ்காவிடம், அவர்கள் உன்னைத்தான் கடத்த வந்தார்கள் என்று அஜித் கூறுகிறார். இதனால் ஆச்சர்யமடைகிறார் அனுஷ்கா. 

அதன்பின், அருண் விஜய் கும்பலின் திட்டம் தனக்கு எப்படி தெரிய வந்தது என்பதை அனுஷ்காவிடம் விவரிக்கிறார் அஜித். இறுதியில், அருண் விஜய் கும்பலிடமிருந்து அனுஷ்காவை அஜித் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

நடிப்பு

போலீஸ் கமிஷனராக வரும் அஜித், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வெவ்வேறு தோற்றங்களில் வரும் அஜித்தை, எந்த தோற்றத்தில் பார்த்தாலும் அழகாகவே தெரிகிறார். ஆவேசப்படும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பு. முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் கதை என்பதால் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்ய இவருக்கு நேரம் இல்லை. அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே அதிர வைக்கிறது.

அருண் விஜய்க்கு இந்த படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரம். அவருடைய தோற்றத்தை அப்படியே மாற்றி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அருண் விஜய்க்கு நிலையான இடம் இருக்கும் என நம்பலாம். 

அனுஷ்கா, திரிஷா இருவருக்குமே சரிசமமான கதாபாத்திரம். பரதநாட்டிய கலைஞராக வரும் திரிஷாவின் அழகு நம்மை மிகவும் கவர்கிறது. ஒரு குடும்ப பெண்ணாக மனதில் எளிதாக பதிகிறார். மாடர்ன் பெண்ணாக வரும் அனுஷ்காவும் நடிப்பில் போட்டி போட்டிருக்கிறார். 
போலீஸ் அதிகாரியாக வரும் விவேக்குக்கு இப்படத்தில் காமெடி செய்ய வாய்ப்பு இல்லை. இருந்தாலும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான நடிப்பில் கைதட்டல் பெறுகிறார். 

டான் மெகதூர் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி விதம் அருமை.

கவுதம் மேனன் தனது முந்தைய படங்களான ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ பாணியிலான படமாகவே இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். ஆனால், அதிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. 

மெதுவாக தொடங்கும் படம் செல்ல செல்ல விறுவிறுப்பாகிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் அவர்களின் வழக்கமான தோற்றத்திலிருந்து மாறுபட்ட தோற்றத்தை தந்து, அதை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். 

இசை

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அதாரு உதாரு’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. ‘உனக்கு என்ன வேணும்’ என்ற பாடலை இரு வெவ்வேறு மாதிரியாக கொடுத்திருந்தாலும் இரண்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் ‘என்னை அறிந்தால்’ வெற்றி நிச்சயம்.

Verdict : வெற்றி நிச்சயம்

Stars : 2.5/5

Leave a comment.

LATEST TAMILCINEMA MOVIE REVIEWS

LATEST IMAGES