banner

மாணவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. காவல்துறைக்கு கமல் கண்டனம்

Jan 23, 2017
மாணவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. காவல்துறைக்கு கமல் கண்டனம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தவறான செயல் என நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது" என கூறியுள்ளார்.

அதேநேரம், ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைபாடு எடுத்த மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் இதுவரை போலீசாருக்கு எதிராக எந்த கருத்தும் கூறவில்லை.

லாரன்ஸ் கூறுகையில், மக்கள் கடலை நோக்கி ஓட வேண்டாம். பாதுகாப்பாக இருக்கவும் என கூறியுள்ளார். அவர் நேரடியாக மெரினாவுக்கு வர முற்பட்டபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Tags : Jayalalitha,Rajinikanth,Kamalhassan,NanjilSambath,Karunanidhi,MKstalin,SasikalaNatarajan,NarendraModi,TamilisaiSoundarajan,Deepa,Vijayakanth,Vaiko,Thirumavalavan,DMK,AIADMK,BJP,DMDK

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES