பரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை?

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க தகுதியற்றவர் என பெங்களூரு சிறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா சிறைக்கு போன பின்னர் அவரது உறவினர்கள் மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் காலமாகினர். இந்த இருவருமே சசிகலாவால் மிகவும் நேசிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இருவரது மறைவின் போதும் சசிகலா பரோலில் வெளிவருவார் என கூறப்பட்டது. சசிகலாவோ பரோலில் வரவில்லை.
தற்போது சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்; இன்று பரோல் கிடைத்துவிடும் என தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதற்கு முன்னர் சசிகலா பரோல் கேட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அப்படி பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என தினகரன் ஆதரவாளர்கள் பெங்களூரு புகழேந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் தினகரன் மீண்டும் சசிகலா பரோல் கேட்டிருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெங்களூரு சிறை அதிகாரிகளோ, சசிகலா மீதான வழக்குகள் முழுமையாக முடியடையவில்லை. நிலுவையில் உள்ளன. ஆகையால் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே தகுதி இல்லாதவர். அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை என்கின்றனர்.
Tags : Sasikala,MKStalin,OPanneerselvam,EdappadiPalanisamy,TTVDinakaran,Jayalalitha,Natarajan
LATEST NEWS
தினகரனுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
தேச துரோக வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் - தினகரன் சவால்
டிடிவி தினகரன் கைது.? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் வெறும் மெழுகு சிலை?
வேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது ஆர் கே நகரை அசத்திய தினகரன்!
நோகாமல் நோன்பு கும்பிட நினைக்கும் தீபா...
நிர்மலா பெரியசாமி - பா.வளர்மதி இடையே மோதல்!..
சிறையில் கதறி அழுத சசிகலா! காரணம் என்ன?
ஜெ மரணத்திற்கு அந்த நபர் தான் காரணம் அப்பல்லோ பகிர் குற்றச்சாட்டு?
Leave a comment.