banner

இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்!

Mar 20, 2017
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே மோதல்!

இளையராஜா தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சனைக்காக போராடி வருகிறார். இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர, இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதற்கு முன் வரை இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் அமெரிக்க கச்சேரியில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் ரூ. 20 லட்சம் கேட்க, இளையராஜா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் எஸ்.பி.பி அவர்கள் அமெரிக்க கச்சேரியை புறக்கணித்துள்ளார்.

இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இவர்களின் 40 ஆண்டுகால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

 

Tags : Illayaraja,Chithra,Yuvanshankarraja,Karthi,kamalhassan,SPBalasubrahmanyam

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES