banner

தேச துரோக வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் - தினகரன் சவால்

Oct 04, 2017
தேச துரோக வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் - தினகரன் சவால்

தேச துரோக வழக்கில் தன்னை கைது செய்தால் அதனை சட்டரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தன்மீது பொய் வழக்கு போட்டிருப்பதாக கூறினார். சேலத்தில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அந்த நோட்டீசில் அப்படி ஒன்றும் தேச விரோத வார்த்தைகள் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் வற்புறுத்தலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கான பலனை போலீசார் அனுபவிப்பார்கள்.

தேச விரோத வழக்கில் என்னை கைது செய்யட்டும், அதனை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் தினகரன் கூறினார்

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பது போல தற்போதய ஆட்சி நடக்கிறது என்றும் தினகரன் தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், விரைவில் சசிகலாவிற்கு பரோல் கிடைக்கும் என்றும் தினகரன் கூறினார்.

Tags : TTVDinakaran,EdappadiPalanisamy,OPanneerselvam,Sasikala,Jayalalitha,MKStalin,NarendraModi

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES