banner

மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் விஜய் - பார்த்திபன் ஆவேசம்

Jan 15, 2017
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் விஜய் - பார்த்திபன் ஆவேசம்

எப்போதும் வித்தியாசமாக மட்டுமே படம் எடுப்பவர் பார்த்திபன். இவர் பேச்சிலும் ஒரு நக்கல் கலந்தே இருக்கும். இவரின் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் பொங்கல் ரிலிசாக நேற்று வெற்றிகரமாக வெளியானது.

இப்படத்தின் பேட்டியின் போது, பைரவா படம் வெளியாவதால் மற்ற படங்கள் விலகி கொண்டன. என்னுடைய படத்துக்கும் திரையரங்கு கிடைப்பதற்கு மிகுந்த சிரமம் எழுந்தது. தயாரிப்பாளர் சங்கத்தில் விளம்பரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கின்றனர்.

விஜய் படத்துக்கு ஸ்டாம்ப் செய்யும் இடத்தில் என்னுடைய படத்துக்கு முழுப்பக்கத்துக்கு விளம்பரம் செய்தால் மட்டும் தான் என்னுடைய படம் கொஞ்சமாவது வெளியே தெரியும்.

எல்லா படத்துக்கும் ஒரு அளவு விளம்பரம் என்றால் விஜய் படத்துக்கு 800 திரையரங்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு 50 மட்டும் தான் கிடைக்கிறது.

முதல் 4 நாட்களில் சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பதால் தான் ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களும் பெரிய சம்பளம் தரமுடிகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

 

Tags : Vijay,RParthiban,ARMurugadass,SAChandrasekar,Bairavaa,Keerthisuresh,Atlee,Bharathan,Sathish,JagapathiBabu,TGMahendran,DanielBalaji,HarishUthaman,SanthoshNarayanan

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES