banner

சற்றுமுன் செய்திகள் 09:01:2017

Jan 09, 2017
சற்றுமுன் செய்திகள் 09:01:2017
* ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
* ஜனவரி 13 வரை டெபிட் , கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படும் - பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவிப்பு.
* குஜராத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை குஜராத் செல்கிறார்.
* முன்னாள் ஈரான் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சனி தனது 82-ஆவது வயதில் மாரடைபால் காலமானார்.
* நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கற்குடியில் கொலைக்கு பழிக்கு பழியாக    ஹரிகரன் (28) என்ற இளைகஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை புளியரை போலீசார் விசாரணை
* புதுடெல்லியின் கிழக்கு உத்தம்நகரில்  நள்ளிரவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு 4 பேர் காயம்.
* விழுப்புரம் அருகே நரமாங்கனி கிராமத்தில் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது நள்ளிரவில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு.
* திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மனோன்மணி ஆலயத்தில் பச்சை நிற மரகத லிங்கம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.ஜமீன் மண்டபத்தில் உள்ள ஆலயத்தின் பின்பக்க கவரை உடைத்து மரகத லிங்கத்துடன், வெள்ளி நாகபாசனம், பாதம் கிரீடம் ஆகியவையும் கொள்ளை.
* பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 45.04 அடி. நீர் இருப்பு 3.3 டிஎம்சி. வரத்து வினாடிக்கு 16 கன அடி. வெளியேற்றம் 155 கன அடி.

Tags : Jayalalitha,Karunanidhi,MKstalin,SasikalaNatarajan,NarendraModi,TamilisaiSoundarajan,Deepa,Vijayakanth,Vaiko,Thirumavalavan,DMK,AIADMK,BJP,DMDK

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES