banner

விஜய் 61 பூஜையுடன் தொடங்கியது

Feb 01, 2017
விஜய் 61 பூஜையுடன் தொடங்கியது

இளையதளபதி விஜய் தற்போது அட்லீயுடன் விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளார். இரண்டாவது முறையாக சேரும் இவர்களது கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் பிளாக்பஸ்டர் அந்தஸ்த்தை பெற்ற படம் தெறி. இப்படத்தை அட்லீ இயக்க தாணு தயாரித்திருந்தார்.

தற்போது அட்லீயை இவர் நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவர் தெறி படத்தை விட விஜய் 61 படம் பெரிய சாதனை படைக்க விஜய் மற்றும் அட்லிக்கு எனது வாழ்த்துக்கள் என ட்விட்டரில் கூறியுள்ளார்.

விஜய் 61 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் சென்னை ECR ல் உள்ள பனையூரில் தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மாலில் எடுக்கப்படவுள்ளது.

Tags : Vijay,Atlee,SJSuryah,Vadivelu,KajalAggarwal,KeerthiSuresh,Sathyaraj,Vijay61,Bairavaa,Jallikattu,ARRahman,SriThenandalFilms,

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES