banner

அஜித்துடன் மோதும் முருகதாஸ் கரணம் என்ன?

Feb 25, 2017
அஜித்துடன் மோதும் முருகதாஸ் கரணம் என்ன?

அஜித்திற்கு தல என்ற பெயர் வரக்காரணமே தீனா படம் தான். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார், இப்படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் மிரட்டல் என்ற படத்தில் இணைந்தது.

ஆனால், அந்த படம் பூஜையோடு நின்றது, அதன் பிறகு எப்போது இந்த கூட்டணி இணையும் என பெரும் விவாதமே நடந்து வருகின்றது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் விவேகம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜுன் 22ம் தேதி வெளிவருவதாக இருந்தது, ஆனால், அன்றைய தினம் தான் முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படமும் வெளிவருகிறதாம்.

இதனால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ஏதாவது ஒரு படத்திற்கு பெரும் அடி விழும் என கூறப்படுகின்றது, ஏனெனில் மகேஷ் பாபு படம் தமிழிலும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Thala57,Siva,AK57,Anirudh,Prasanna,Vivek Oberoi,AksharaHassan,KajaiAggarwal,Ajith,AksharaaHassan,Khushbo

Leave a comment.

LATEST NEWS

LATEST IMAGES